2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஐவர் படுகாயம்

George   / 2016 நவம்பர் 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, பஸ்ஸூக்கு காத்திருந்த முதியவர்கள் மீது மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி உட்பட ஐந்து பேர், காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மதியம், மந்திகை சந்தியில் ஏற்பட்ட இந்த விபத்துச் சம்பவத்தில் கே.யோகராஜா (வயது 57), டி.உருத்திரகுமார் (வயது 57), ஏ.சிவனேஸ்வரராஜா (வயது52), எஸ்.தங்கவேல் (வயது 68), மற்றும் முச்சக்கரவண்டி சாரதியான கீ.பீற்றர்(வயது 37) ஆகிய ஐவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X