2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை, பெரியவிளான் தெல்லிப்பழை வீதியில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த திரவியம் அகிலேஸ்வரன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதில், அகிலா (வயது 14) என்ற சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

மகளை மோட்டார் சைக்கிளில் தனியார் கல்வி நிலையத்துக்கு ஏற்றிச் சென்றபோதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X