2021 மே 06, வியாழக்கிழமை

விபத்தில் சாரதி, நடத்துனர் படுகாயம்

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்  தென்மராட்சி  எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை 6.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினி பஸ், எழுதுமட்டுவாள் சந்தியிலிருந்து கிளாலி வீதிக்குத் திரும்புகையில், யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸுடன் மோதியதாலே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மினி பஸ் குடைசாய்ந்துள்ளதோடு, அதன் சாரதி மற்றும் ஓட்டுநர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .