2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெண் படுகாயம்

Sudharshini   / 2016 ஜூலை 26 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.விஜயவாசகன்

மீசாலை, புத்தூர்ச் சந்தியில் திங்கட்கிழமை (25) மாலை வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர்,  இராணுவ வாகனத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மந்துவில் கிழக்கைச் சேர்ந்த லி.உதயமலர் (வயது 57) என்ற பெண்ணே படுகாயமடைந்தார் இதில் படுகாயமடைந்துள்ளார்.

மீசாலை - புத்தூர்ச் சந்தியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவிருந்த பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியின் மறு பக்கத்திலிருந்து வீதியினைக் கடக்க முற்பட்டவேளை, சாவகச்சேரி நோக்கி பயணித்த இராணுவ பிக்கப் ரக வாகனத்தில்; மோதுண்டு படுகாயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X