2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விபத்தில் பெண் பலி

Administrator   / 2016 மே 10 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், கந்தர்மடச் சந்தியில் நேற்று திங்கட்கிழமை (09) மாலை இடம்பெற்ற விபத்தில் கோப்பாய் கட்டப்பிராயைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை கங்காதேவி (வயது 52) என்பவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கந்தர்மடச் சந்தியில் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை, அவ்வழியாக சென்றுக்கொண்டிருந்த மற்றொரு லொறி முந்திச் செல்ல முற்பட்ட போதே, குறித்த லொறி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கின் பின்னால் அமர்ந்து பயணித்த மேற்படி பெண் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ளடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X