Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மணல்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் விறகு வெட்டிய 60 வயது முதியவரை 80 மணித்தியாலங்கள் சமுதாயம் சார் சீர் கட்டளைக்கு உட்படுத்துமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொ.குமாரசாமி சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
கரவெட்டி பகுதியினைச் சேர்ந்த மேற்படி முதியவர் அரச வனப் பகுதிக்குள் நுழைந்து விறகு வெட்டிய குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை (25) பருத்தித்துறை நீதிமன்றில் முதியவரை ஆஜர்ப்படுத்திய போது, பதில் நீதவான் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். எனினும் அவரால் அவ்அபராத தொகையினை செலுத்த முடியவில்லை. இதையடுத்து சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரி அவரை பொறுப்பேற்று கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .