2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வேறுபாடுகளின்றி பொறுப்புடன் செயற்பட விரும்புகின்றோம்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

'ஊடக சுதந்திரம் வழங்கிய அரசாங்கம் என்றவகையில், இன, மத வேறுபாடு பாகுபாடு இன்றி, பொறுப்புடன் செயற்பட விரும்புகின்றோம்' என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்கள், ஊடக அமைப்புக்கள், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்தன பரணவிதான ஆகியோருக்கிடையில் இராமநாதன் வீதியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், பிரச்சினைகள் என்பன இல்லாமல் போய்விட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ், கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் போல் இடம்பெறமாட்டாது என உறுதியுடன் கூறுகின்றோம்.

வடக்கு, தெற்கு உடகவியலாளர்கள் கடந்த ஆட்சியில் ஊடக அடக்கு முறையை எதிர்கொண்டு துன்பப்பட்டார்கள். சட்டத்துக்கு அரசியல் தலையீடு கிடையாது.  ஊடகவியலாளர்கள் கேட்ட ஊடக சுதந்திரத்தை நாம் வழங்கியுள்ளோம். இதனை மக்களுக்கு சேவையாற்ற பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X