2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விலைக் குறைப்பு சலுகையை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நிலையில், இதன் பயனை வடக்கு மக்களும் அனுபவிக்கக் கூடிய ஏற்பாடுகள் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நிதி அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (08) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்ககையில், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களின் விலைகளை அரசுகள் அவ்வப்போது குறைக்கும் பட்சத்தில் வடக்கு மக்களால் இச்சலுகையை அனுபவிக்க இயலாதுள்ளது.

கடந்த வரவு - செலவுத்திட்டத்தில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 1,346 ரூபாய் என அரசு நிர்ணயித்திருந்தும் யாழ்ப்பாணத்தில் இது 1,500 ரூபாவுக்கே விற்கப்பட்டு வருகிறது. ஏனைய பொருட்களின் விலை நிலவரங்களும் இவ்வாறுதான் இருக்கின்றன. எனவே, அரசாங்கத்தின் இவ்வாறான சலுகைகள்கூட எமது மக்களுக்குக் கிடைப்பதில்லை. 

பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் விலைச் சலுகையினை அனுவிப்பதிலும் புறக்கணிக்கப்படும் நிலையே தொடர்கின்றது.

இவ்வாறான விடயங்களை அவதானத்தில் கொண்டு, தென் பகுதி மக்கள் அனுபவிக்கும் விலைச் சலுகைகளை வடக்கு மக்களும் சமாந்தரமாக அனுபவிக்கக்கூடிய வகையில் ஒரு பொறிமுறையை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X