2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

Niroshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

'வட மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களில், சிகை, தாடி மற்றும் மீசை அலங்காரம் செய்வதற்கான விலைப்பட்டியல் கட்டாயம் காட்சிப்படுத்தப்படவேண்டும்' என சிகையலங்கார சங்கத்தின் வடமாகாண சமாச தலைவர் க.நாகராசா புதன்கிழமை (16) தெரிவித்தார்.

மேலும், 'விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத சிகையலங்கார நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'சிகையலங்கார நிலையங்களில் பாவிக்கப்படும் பொருட்களின் காலாவதி திகதிகள் பற்றி, சிகையலங்கார உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு காலாவதியான பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X