2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வெளிநாட்டு கொக்குகள் 10ஐ வேட்டையாடியவர் கைது

Gavitha   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மிருசுவில் பகுதியிலுள்ள களப்புக்கு இரைதேடி வந்த வெளிநாட்டு கொக்குகள் 10ஐயும் வேட்டையாடி, அதன் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரை, நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களப்புக்கு வரும் வெளிநாட்டு கொக்குகளை பொறி வைத்துப் பிடித்த மேற்படி நபர், அவற்றின் தோல்களை உரித்து இறைச்சியாக்கிக் கொண்டிருப்பதை அவதானித்த ஒருவர், அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

இதன் பின்னர், சந்தேக நபர் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது, கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X