Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
இலங்கையில் தூதுவராலயங்கள் இல்லாத வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் கொண்ட குழுவினர் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு புதன்கிழமை (03) விஜயம் மேற்கொண்டு மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் போருக்கு பின்னரான நிலைமைகள் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் ஏற்பாட்டில் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டனர். இவர்கள் வடமாகாண ஆளுநர், மற்றும் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் ஆகியோருடனும் கலந்துரையாடினர்.
இலங்கையில் தூதுராலயங்கள் இல்லாத இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதுவர்கள் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago