Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்திய மீனவர்களின் பிச்சினைகள் இல்லாதபோதிலும், வெளிமாவட்ட மீனவர்களின் தொடர்பிலான பிரச்சினைகள் காணப்படுவதாக, மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்;லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்றொழில் குடும்பங்கள் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில்கள், தமது தொழில்;களைப் பாதிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலரைத் தொடர்புகொண்டு வினவிய போது,
'முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வகையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் என்பது தற்போது இல்லை. ஆனாலும் வெளிமாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் என்பது தற்போது காணப்படுகின்றது. வெளிமாவட்ட மீனவர்கள் அதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொண்டு தான் இங்கு வந்து தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
அது இங்குள்ள கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது தொடர்பாக குழு ஒன்று நியமிக்;கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, தேசியமட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் மூலம் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அறிக்கைகள் உரிய இடங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்.
1 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago