Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 22 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான், குறிப்பிட்டார்.
மேலும், வெள்ள நீர் பாதிப்புக்குள்ளாக மக்களின் நிலமையை கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.
இப்பிரதேசமானது, வருடாந்தம் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதுடன்;மக்கள் இடம்பெயரும் நிலைமையும் காணப்படுகின்றது.
இம்மக்களுக்க நிம்மதியாக இருக்க ஒழுங்கான வீடமைப்பு வசதி இல்லை. ஒழுங்கான வீதி கிடையாது. மின்சார வசதி இல்லை. நீர் வடிந்தோட ஒழுங்கான வடிகால்கள் இல்லை. சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட உணவைக்கூட சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர்.
தற்போது, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால், வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக காக்கைதீவு நாவாந்துறையை இணைக்கும் கடற்கரையோர வீதியில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
26 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago