2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வெள்ள நிவாரண நிதி ஊழல் தொடர்பில் விசாரணை

Menaka Mookandi   / 2016 ஜூன் 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வேலணைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இன்று செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்கு கொடுக்கப்பட்ட உதவிகளில், அரச அதிகாரிகள் சிலர் ஊழல் செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது.

இதனடிப்படையில், ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும், குறிப்பிட்ட கிராமஅலுவலர் பிரிவுகளில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X