2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வெள்ளை வானில் இருவர் கடத்தல்?

George   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், வெள்ளை வானில் வந்தவர்களால் புதன்கிழமை (27) மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை.

ஜோர்ஜ் இராஜநாயகம் மற்றும் வி.மைக்கல் என்ற இருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்களை வானில் வந்தவர்கள் வழிமறித்துக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென உறவினர்கள் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X