2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வெவ்வேறு விபத்துக்களில் 8 பேர் படுகாயம்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான்
தென்மராட்சிப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை (20) இடம்பெற்ற விபத்துக்களில் படுகாயமடைந்த 8 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், 6 வயதுச் சிறுமி, 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆகியோர் இவ்வாறு படுகாயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 4 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து இடறி வீழ்ந்து ஒருவரும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேரும் மோட்டார் சைக்கிள், சைக்கிளுடன் மோதியதில் ஒருவரும் இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை, கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X