2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஸ்ரீகஜனை கைது செய்ய நடவடிக்கை

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பி செல்ல, உதவினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜனை கைது செய்வதுக்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக குற்றபுலனாய்வு துறை அதிகாரி மன்றில் தெரிவித்தார்.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான  யாழ்.பொலிஸ் நிலைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுந்தரேஸ்வரன் ஸ்ரீகஜன் தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் இன்று (28) இடம்பெற்ற விசாரணைகளில், குற்றபுலனாய்வு துறை அதிகாரி, இரண்டாவது சந்தேக நபரை கைது செய்வதுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X