2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ வீரகத்தி விநாயகர் வருடாந்த திருவிழா

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி, சங்கத்தானை இத்தியடி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவப் பெருவிழா, எதிர்வரும் திங்கட்கிழமை (01) காலை  11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து  10 நாட்கள் இடம்பெறவுள்ளது.

8ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும்  9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தேர்த்திருவிழாவும் 10ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

வருடாந்தத் திருவிழாவை மகோற்சவ பிரதம குரு ‘வித்தியா சாகரம் ' சிவஸ்ரீ ஜெகதீஸ்வர மயூரக் குருக்கள் தலைமையில், ஆலய பிரதம குரு வேதாகம, சிவசுரபி, பண்டிதர் கலாநிதி து.கு. ஜெகதீஸ்வரக் குருக்கள், ஆலய குரு பிரம்ம ஸ்ரீ கு. கஜானந்த சர்மா, சாதக ஆசிரியர் பிரம்ம ஸ்ரீ ஜனார்த்தன சர்மா ஆகியோர் நடத்தி வைப்பார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X