Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 24 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களை, 120 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய, மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல.டி.சில்வா, சனிக்கிழமை (23) தெரிவித்தார்.
கம்பஹா மற்றும் சேத்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த இருவரும், வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 104 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.
சந்தேகநபர்கள் தொடர்பில் ஒரு வாரத்துக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, சந்தேக நபர்கள் தீவிர கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் தொடர்புடைய மேலதிக சந்தேகநபர்களை கைது செய்தவதற்காக கம்பஹா பகுதிக்கு மேலதிக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago