2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’தென்பகுதியினருக்கு உதவ யாழ். மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்’

George   / 2017 ஜூன் 02 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு, யாழ்ப்பாண மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர்” என, தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, இந்த உதவிகள் ஊடாக இரு மக்களிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்படும் என்றார்.

இது தொடர்பில் நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த அவர், “சீரற்ற கால நிலையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு வழங்குவதற்றாக, பொலிஸாரும் நிவாரணப் பொருட்களை திரட்டி வருகின்றனர்.

வடக்கிலும் உணவு பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் திரட்டப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்து மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் இந்த பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு பொருட்கள் சேர்க்கும் பணிகள் எதிர்வரும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. இவ்வாறு எமக்கு கிடைத்துள்ள பொருட்களை எதிர்வரும் வாரத்திற்குள் அனுப்பி வைக்கவுள்ளோம். இந்த உதவிகள் இருபகுதி மக்களிடையேயும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X