2025 ஜூலை 19, சனிக்கிழமை

25 இடங்களுக்கு பாதுகாப்பு கடவைகள் வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி அறிவியல் நகர் தொடக்கம் ஆனையிறவு வரையிலான புகையிரதப் பாதைகளை ஊடறுத்துச் செல்லும் 35 வீதிகளில் 10 வீதிகளுக்கு மாத்திரமே பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்படாத 25 வீதிகளிலும் விபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான இடங்களாகக் காணப்படுகின்றன. வடக்குக்கான புகையிரத சேவையானது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 17 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக திருமுறிகண்டி இந்து வித்தியாலயம், கிளிநொச்சி சிவபாத கலையகம், புனித பெண்கள் திரேசா கல்லூரி, பரந்தன் இந்து மகா வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகள் புகையிரத வீதிகளுக்கு அண்மித்துக் காணப்படுவதுடன் இப்பாடசாலைகளில் கல்வி பயிலும் பெருமளவான மாணவர்கள் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைக் கடந்தே பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே, தேவையான இடங்களில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் புகையிரத திணைக்களத்துக்கும் கடந்த காலங்களில் மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X