2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'இனவாதிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீணான குரோதப் போக்குகளை வளர்க்கும் செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் வாழும் இனக் குழுக்களை மத ரீதியில் புண்படுத்தக்கூடிய விடயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவோர் தொடர்பில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறான சில செயற்பாட்டாளர்கள் காரணமாக நாட்டில் பல்வேறு அனர்த்தங்கள் சிறுபான்மை இன மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் ஏற்பட்டிருந்தன.

அந்த வகையில் இஸ்லாமிய சகோதர மக்களின் மத உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பினர் கூறிவரும் கருத்துக்கள் ஏற்புடையதல்ல. இவ்வாறான கருத்துக்கள் நாட்டில் மீண்டுமொரு தேவையற்ற முரண்பாட்டையும் குழப்பத்தையுமே ஏற்படுத்த வழிவகுக்கும். தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பெரும் தடையாகவே அமையும்.

எனவே, இவ் விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், இவ்வாறான நிலைப்பாடுகளைத் தவிர்க்கும் வகையிலான பொறிமுறை ஒன்றை உடன் வகுக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X