2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'இயந்திரங்களை திருத்தித் தாருங்கள்'

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணம் - வேலணைத்துறையூர் கடற்றொழிலாளர்கள் அபிவிருத்தி அமைப்பில் பழுதடைந்துள்ள ஐஸ் கட்டித் தொழிற்சாலை இயந்திரங்களையும் உபகரணங்களையும் திருத்தம் செய்து தருமாறு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த அரசாங்க காலத்தில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இத் தொழிற்சாலைக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. அவை தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதன் காரணமாக ஐஸ் கட்டியை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பதாகவும் 15 இலட்சம் ரூபாய்க்கும் மேலான நிதி இச் சாதனங்களை திருத்தம் செய்வதற்கு தேவைப்படும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதனங்கள் திருத்தம் செய்யப்படும்போதுதான் ஐஸ் உற்பத்தியில் ஈடுபட முடியுமெனவும் ஐஸ் உற்பத்தி இடம்பெறாமையினால் ஐஸினை யாழ்ப்பாணத்திலிருந்தே வேலணைக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X