2025 ஜூலை 16, புதன்கிழமை

இராணுவத்தினருக்கு எதிராக அதிக முறைப்பாடுகள்

Sudharshini   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் சாட்சியமளித்தவர்களில் அதிகமானவர்கள், இராணுவமே தங்கள் உறவுகள் காணாமற் போவதற்கு காரணம் என சாட்சியமளித்துள்ளனர்.

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 235 பேர் சாட்சியமளிக்கும் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் சாட்சியமளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.

இந்த  அமர்வில் அதிகளவானவர்கள் இராணுவத்தினரைக் குற்றஞ்சாட்டினர். இராணுவத்தினர் கைது செய்து காணாமற்போனமை, சுற்றிவளைப்பில் பிடிக்கப்பட்டு காணாமற்போனமை, இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு காணாமற்போனோர் என அதிகமானவர்கள் சாட்சியங்களை பதிவு செய்தனர்.

ஒரு சில முறைப்பாடுகள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் கடத்தியதாகவும் மேலும் சிலர் கடத்தியவர் யாரென்று தெரியாது என்றும் கூறினர்.

மேலும், இந்த அமர்வில் 43 பேர் புதிதாக சாட்சியமளிப்பதற்காக பதிவுகளை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X