2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

1 இலட்சம் ரூபாய் பெறுமதியான 45 பனை மரத் தீராந்திகள் மீட்பு

Princiya Dixci   / 2016 மே 01 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

பளை, தர்மங்கேணி பகுதியில் இருந்து கிளிநொச்சிக்கு கடத்தப்படவிருந்த பனை மரத் தீராந்திகள், 45ஐ மீட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக பளைப் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தனர்.

ஹன்ரர் வாகனத்தில் பனைமரதீராந்திகள் கடத்தப்படுவதாகப் பளைப் பொலிஸாருக்கு இரகசிய தகவல் சனிக்கிழமை (30) இரவு கிடைக்பெற்றிருந்தது.

சம்பவ இடத்துக்கு சிவில் உடையில் பொலிஸார் வருவதைக் கண்ட கடத்தல்காரர்கள் வாகனத்தினையும் பனைமரதீராந்திகளையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட தீராந்திகளின் பொறுமதி 1 இலட்சம் ரூபாய் எனப் பொலிஸார் கூறினர்.

வாகனத்தின் இலகத்தகடு ஊடாக விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த வாகனம் நெல்லியடிப் பகுதியினை சேர்ந்தவருடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்குரிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X