2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இலவச கருத்தரங்கு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சட்டத்தரணி வே.தேவசேனாதிபதியின் அனுசரணையுடனும் வடமாகாண கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடனும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள வடக்கு மாகாணத்துக்குட்பட்ட 12 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் சித்தி வீதத்தை அதிகரிக்கும் முகமாக, துறை சார்ந்த பாடங்களுக்கான இலவச கருத்தரங்கு,  பாடக்குறிப்புக்கள், கடந்த கால வினாவிடைத் தொகுப்பு புத்தகங்கள் என்பன வழங்கப்படவுள்ளதாக துணுக்காய் வலயக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சக்திதரன் தெரிவித்தார்.

தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இதற்கமைய 11 ஆம் திகதி வியாழக்கிழமை தீவக வலயத்துக்குட்பட்ட மாணவர்களுக்கான கருத்தரங்கு, ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மறுநாள் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வலிகாமம் கல்வி வலய மாணவர்களுக்கு யாழ். வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

13 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த ஆண் மாணவர்களுக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

15 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்  நடைபெறவுள்ள கருத்தரங்கில், முன்னைய கருத்தரங்குகளில் பங்கேற்க தவறிய யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களும் பங்குபற்றலாம்.

16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு  கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

17 ஆம் திகதி புதன்கிழமை துணுக்காய், முல்லைத்தீவு ஆகிய இரு கல்வி வலயங்களையும் சேர்ந்த   மாணவர்களுக்கு கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெறவுள்ளது.

18 ஆம் திகதி வியாழக்கிழமை வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு இரண்டு கல்வி வலயங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெறும்.

19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார்  நகரசபை மண்டபத்தில் மன்னார், மடு ஆகிய கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நடைபெறும்.

கருத்தரங்கு தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர், வே.தேவசேனாதிபதி 077-1133400/மு.சக்திதரன் 077-8429649 எனும் அலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X