2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை'

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில் நெல் அறுவடைகள் ஆரம்பித்த நிலையில், விவசாயிகள் எதிர்பார்த்த வகையில் விளைச்சல் கிடைக்கவில்லையென விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

ஏக்கருக்கு முப்பது மூடைகளுக்கு மேல் விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் விவசாயிகள், காலநிலை, நோய்த்தாக்கம் என்பன இவ்வாண்டு காலபோகத்தில் ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக, பதினைந்து தொடக்கம் இருபது வரையான மூடைகளே ஏக்கருக்கு அறுவடை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினர்.

பெருமளவு பணத்தை மருந்துக்கும் அறுவடை இயந்திரங்களுக்கும் செலவு செய்து விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் விவசாயிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X