2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'எல்லா விடயங்களுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கக்கூடாது'

George   / 2016 மே 13 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

'எந்த விடயத்துக்கும் அரசாங்கத்தை எதிர்பாராமல் தனிப்பட்ட சமூக ஆர்வலர்கள் இப்படி தொழில் வாய்ப்பளிக்கும் பயிற்சிநெறிகளை ஆரம்பித்தல் அவசியமானதாகும்' என யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பொ.தயாளன், வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.

அமரர் லாலீர் பவுன்டேஷனால் யாழ்ப்பாணம் முஸ்லீம் வீதியில் நடத்தப்படுகின்றன மகளிருக்கான கைப்பைகள் தயாரிக்கும் பயிற்சிப்பட்டறையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் 
அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கருத்துகூறுகையில்,

'எந்த விடயத்துக்கும் அரசாங்கத்தை எதிர்பாராமல் தனிப்பட்ட சமூக ஆர்வலர்கள் இப்படி தொழில் வாய்ப்பளிக்கும் பயிற்சிநெறிகளை ஆரம்பித்தல் அவசியமானதாகும். இந்த பயிற்சிநெறி மூலம் பெண்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. 

தயாரிக்கின்ற பொருட்;களுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்வதும் அவசியமாகும். சிறு கைத்தொழில்கள் ஆரம்பிக்க 60 பேருக்கு வாழ்வாதார உதவிகள் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X