2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

701.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த 701.5 ஏக்கர் காணிகள், செவ்வாய்க்கிழமை (29) இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளுக்கும் வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியில் 233 ஏக்கர் காணிகளுக்குமே இவ்வாறு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இந்தக் காணிகளை விடுவிப்பதாகக் கூறப்பட்ட போதும், அதற்கு முன்னராகவே இராணுவத்தினர் விடுவித்துள்ளனர்.

இதனடிப்படையில், வலிகாமம் கிழக்குப் பகுதி தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,வலிகாமம் வடக்கில் பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு, காங்கேசன்துறை தெற்கு, பளைவீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு ஆகிய பிரதேசங்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X