2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

4 ஏக்கர் சவுக்கு காடுகள் தீயில் எரிந்து நாசம்

George   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கர்ணன்

வடமராட்சி மணற்காடு பிரதேசத்தில் 4 ஏக்கர் சவுக்கு காடுகள் திங்கட்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் அழிவடைந்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார்.

சவுக்கு காட்டில் ஏற்பட்ட தீயை யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அணைத்தமையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் விசமிகள் சிலர் வேண்டுமென்றே தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சவுக்கு விறகுகள் எடுப்பதற்காக சவுக்கு காடுகளை தீவைத்து எரிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்குப் பகுதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X