2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

5,341 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் வலிகாமம் வடக்கில் இன்னமும் 5,341 ஏக்கர் (5341.28) காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்க முன்னர் வலிகாமம் வடக்கில் 7080.5 ஏக்கர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்தது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இரண்டு கட்டங்களாக 1,739.02 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

இதற்கமைய, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு, பளைவீமன்காமம் வடக்கு மற்றும் தெற்கு, கட்டுவன், தென்மயிலை, வறுத்தலைவிளான், வசாவிளான், மயிலிட்டி, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கின் வளலாய் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த காணிகள் விடுவிக்கப்பட்டன.
வலளாய் பகுதியில் அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட்டு, வலிகாமம் கிழக்கு பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலிகாமம் வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படவேண்டிய கிராம அலுவலர் பிரிவுகளின் விபரங்கள் வருமாறு.

இல: - கிராமஅலுவலர் பிரிவு  -  கிராமஅலுவலர் பிரிவு இலக்கம் - விடுவிக்கப்படவேண்டிய காணி (ஏக்கரில்)
01          நகுலேஸ்வரம்                       ஜே - 226                                                 74.1
02    காங்கேசன்துறை மேற்கு           ஜே - 233                                                 938.6
03    காங்கேசன்துறை மத்தி               ஜே - 234                                                 247
04    காங்கேசன்துறை தெற்கு             ஜே - 235                                               86.57
05    பளைவீமன்காமம் வடக்கு          ஜே - 236                                                92.6
06    கட்டுவன்                                         ஜே - 238                                                 238
07    தென்மயிலை                                 ஜே - 240                                                220.99
08    வறுத்தலைவிளான்                      ஜே - 241                                                89.52
09    குரும்பசிட்டி                                   ஜே - 242                                                    247
10    குரும்பசிட்டி கிழக்கு                     ஜே - 243                                                    98.8
11    வசாவிளான் கிழக்கு                      ஜே - 244                                                    18.17
12    வசாவிளான் மேற்கு                       ஜே - 245                                                    98.8
13    மயிலிட்டி வடக்கு                           ஜே - 246                                                    1202
14    தையிட்டி கிழக்கு                             ஜே - 247                                                     222.3
15    தையிட்டி வடக்கு                             ஜே - 249                                                    172.9
16    தையிட்டி தெற்கு                               ஜே - 250                                                     75.14
17    பலாலி தெற்கு                                    ஜே - 252                                                     10.43
18    பலாலி கிழக்கு                                   ஜே - 253                                                        211
19    பலாலி வடக்கு                                   ஜே - 254                                                        256.36
20    மயிலிட்டிதுறை தெற்கு                   ஜே - 248                                                         172.9
21    மயிலிட்டித்துறை வடக்கு                ஜே - 251                                                         172.9
22    பலாலி வடமேற்கு                             ஜே - 255                                                          197.6
23    பலாலி மேற்கு                                     ஜே - 256                                                           197.6

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X