Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்குச் சொந்தமான 2,149 ஏக்கர் விவசாய நிலம், சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலத்தை இழந்த மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு, மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக மகாவலி அதிகாரசபை மேற்கொண்டுவரும் முயற்சிகளை உடன் நிறுத்துமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவர்கள் ஆமோதித்துள்ளனர்.
மேற்படி விடயம் தொடர்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது, வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகையில்,
கொக்குத்தொடுவாய், கருணாட்டுக்கேணி, கொக்கிளாய் ஆகிய எல்லை கிராமங்களில் இருந்து 1984ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வெளியேறியதன் பின்னர் அந்த மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், நிலத்தை இழந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.நிலை இவ்வாறிருக்க, சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்த காணிகளுக்கு மாற்றாக, மக்கள் மானாவாரி நெற்செய்கை மேற்கொண்டுவரும் நிலங்களை வழங்குவதற்கு மகாவலி அதிகாரசபை, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் ஊடாக விண்ணப்பித்துள்ளது.
இதில் அந்த மக்களுக்கு விருப்பமில்லை. தங்களுடைய நிலங்களே தங்களுக்கு தேவை என்பதை திடமாக கூறிவருகின்றனர் என்றார்.
இந்த விடயம் தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் சகல ஆவணங்களையும் தாம் வழங்கியுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், மேற்படி மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, ஒருங்கிணைப்பு குழு, மேற்படி மாற்று நிலம் வழங்கும் நடவடிக்கையை நிறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025