Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு பாண்டியன்குளம் துணுக்காய் பகுதிகளில் கடந்த நாட்களாக பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 3,014 ஏக்கர் வரையான பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளதாக கமநல சேவை நிலையங்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களாக பெய்த மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் பெருமளவான பயிர்செய்கைகள் அழிவடைந்;துள்ளன.
குறிப்பாக மேற்கொள்ளப்பட்ட மேட்டுநிலப் பயிர் செய்கைகள் நெற்செய்கைகளும் அழிவடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநலசேவை நிலையத்தின் கீழ், 2,499 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயிர் செய்கைகளே அழிவடைந்துள்ளன.
அதாவது, காலபோக செய்கையில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து, பயறு, சோளம், கௌப்பி உள்ளிட்ட உப உணவுப்பயிர்கள் நெற் செய்கைகள் என்பன இவற்றில் அடங்குகின்றன.
இதேபோன்று பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் 515 ஏக்கர் நில பயிர்ச்செய்கையும் இவ்வாறு அழிவடைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago
46 minute ago
53 minute ago