Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் உற்சவத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (11) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
உற்சவத்துக்கு செல்பவர்களுக்கான படகு சேவையானது பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி காலை, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து ஆரம்பமாகி மதியம் 1 மணி வரை இடம்பெறும்.
1 மணிக்குப் பின்னர் படகுச் சேவை நிறுத்தப்படும். திருவிழாவுக்கு செல்வோர், 1 மணிக்கு முன்னர் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், திருவிழாவை முன்னிட்டு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சேவையினரின் விசேட போக்குவரத்துச் சேவையும் இடம்பெறும். இதேவேளை, ஆலயத்தை சுத்தப்படுத்தல், சுகாதார ஏற்பாடுகள் அனைத்தையும் கடற்படையினர் செய்வதுடன், படகு பயணங்களின் போது, விசேட ரோந்து பணியிலும் ஈடுபடவுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .