2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள அகதிகளுக்கு அனுமதியில்லை

Niroshini   / 2016 ஜனவரி 28 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என யாழ்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் என்.நடராஜன் அழைப்புக் கடிதம் அனுப்பினார்.

தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழாவுக்கு செல்லவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை (27) இராமேஸ்வரம், வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ராமபிரதீபன் தலைமையில் இடம்பெற்ற திருவிழா செல்லுவது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், திருவிழாவுக்கு அகதிகளை அனுமதிப்பில்லையென்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X