2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'கடற்படையினர் தாக்கினர்'

Kogilavani   / 2017 மார்ச் 22 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாக, யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  இந்திய மீனவர்கள் 10 பேரும் தெரிவித்துள்ளனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த,   இந்தியா  தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள்,  நேற்று முன்தினம்  இரவு கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தாம் கைது செய்யப்படும் போது, இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாகவும், தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாகவும் இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தாம் மீனவர்களை தாக்கவில்லை எனவும், அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டிலேயே, அவர்கள் காயமடைந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதான மீனவர்கள், கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மேற்படி மீனவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .