2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கல்விச் செயலமர்வுகள்

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் ஐயனார் சனசமூக நிலையம், வெளிச்சம் புலம்பெயர் அமைப்பின் நிதியுதவியுடன் பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களின் கல்வியை விருத்தி செய்வதற்கான கல்விச் செயலமர்வுகளை நடத்தி வருகின்றது.

பின்தங்கிய நிலையிலும் ஆசிரிய ஆளணி வளங்கள் குறைவாகவும் காணப்படும் ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், ஐயானார்புரம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்று வரும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் மாலை நேர கற்பித்தல் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணம், பெரதெனியா, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து வகுப்புக்களை நடத்துகின்றனர்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்;கள், பாடசாலை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடசாலை செல்லாத மாணவர்களை மீளவும் பாடசாலையில் இணைக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X