2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'30,000க்கு மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றப்பட்டுள்ளன'

Gavitha   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முகமாலை பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக, கலோற்றஸ் நிறுவனத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த 2012ஆம் ஆண்டு முதல் முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதி மிகவும் சவால் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றமையால், இவற்றை அகற்றுவதற்;கு தற்போது 500 பணியாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2002ஆம் ஆண்;டிலிருந்து கலோற்றஸ் நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது. 2012ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள், இலங்கையின் வடக்கு பகுதியில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெடிபொருட்களை அகற்றியுள்ளோம்' என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போது முகமாலை பகுதியில் டாஸ் நிறுவனமும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X