2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'குடாநாட்டு மக்களை காட்டுமிராண்டிகளாக காட்டுவதற்கு முயற்சி'

George   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'வடக்கு மக்களை காட்டுமிராண்டிகள் போல் நாகரிமற்ற சமூகம் போல் வெளியில் காட்டுவதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற 'யாழ். பிராந்திய பிள்ளைகள்' விழாவில் கலந்துகொண்டு பிள்ளைகளுக்கான பரிசில்களை வழங்கி உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இன்று, „யாழ்ப்பாணக் குடாநாட்டிலே எங்குப் பார்த்தாலும் கஞ்சா வியாபாரம், போதைவஸ்து வியாபாரம் அல்லது மதுவிலே கூடுதல் பாவனை என யாழ்ப்பாணம் போய்க் கொண்டிருக்கின்றது... என இலங்கையின் ஜனாதிபதியே சொல்லும் அளவுக்கு பல்வேறுபட்ட செய்திகளை நாம் படிக்கின்றோம்.

வடக்கிலே இருக்கின்ற ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் பாவிப்பது தெற்கிலிருந்து வருகின்ற மதுவைத்தான். அதனைக் கருத்தில் எடுக்காமலே மறைமுகமாக தமிழர்களே முழு மதுவையும் குடிப்பதாக செய்திகள் வருகின்றன.

கஞ்சா கடத்தல் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி பிடிபடுவதாக செய்திகள் வெளிவருகின்றன. இவை எல்லாவற்றையும் பார்க்கின்ற போது காட்டுமிராண்டிகள் போல் நாகரிமற்ற சமூகம் போல் எம்மை வெளியில் காட்டுவதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கல்வி இல்லாமல் இந்த உலகத்தினை வெல்லமுடியாது. கல்வியில் வெல்வதற்கு சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும். நவீன தொழிநுட்பங்கள் எமக்கு முக்கியமானவை. நவீன தொழில் நுட்பங்களை நாம் புறந்தள்ள முடியாது. அவையே எமது குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் பெரும் சவாலாக விளங்குகின்றன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X