2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'13,645 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 13,645 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்க வேண்டிய தேவையுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் 2016ஆம் ஆண்டுக்கான தேவைகள் தொடர்பான புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த 42,736 குடும்பங்களில் 41,862 குடும்பங்கள் தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறு மீள்குடியேறிய குடும்பங்களில் கூடுதலான குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார தேவைகளுக்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன் கூடுதலான குடும்பங்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறான வாழ்வாதார தேவையுடைய குடும்பங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட குடும்பங்கள் இவற்றில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X