2025 ஜூலை 21, திங்கட்கிழமை

8 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

Thipaan   / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் தினத்தையொட்டி யாழ் சிறைச்சலையில் இருந்து 8 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யபட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி எஸ்.இந்திரகுமார் தெரிவித்தார்.

நத்தார் தினமாகிய வெள்ளிக்கிழமை (25) நாடளாவிய ரீதியில் சிறுகுற்றங்களில் தண்டனை பெற்று மறியலில் உள்ள கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினம் யாழ் சிறைச்சாலையில் இருந்து 7 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் இருவருக்கு வேறு குற்றங்களுக்கான வழக்கு நிலுவையில் உள்ளமையால் அந்த வழக்குக்காக மறுபடியும் மறியலில் வைக்கபடுவர் என சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .