Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 மே 14 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
“கிளிநொச்சி மேற்கு கிராமங்களில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக, மாவட்ட அதிகாரிகள், கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் மேற்கொள்ள வேண்டும்” என்று, கிளிநொச்சி மேற்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுஅமைப்புகள், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மனுக்களைக் கையளித்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகாரிகள், கிளிநொச்சி மேற்குக் கிராமங்களுக்கு நேரில் வருகை தந்து, கிராமங்களில் காணப்படுகின்ற போக்குவரத்து, மருத்துவம், கல்வி, குடிநீர் உட்பட பல்வேறு தேவைகளை ஆய்வுசெய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அம்மனுக்களில் கோரப்பட்டுள்ளன.
இம்மனுக்களில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“கிளிநொச்சி மேற்கு கிராமங்களான, கிராஞ்சி, பள்ளிக்குடா, இரணைமாதாநகர், வலைப்பாடு, நாச்சிக்குடா ஆகிய கிராமங்களில், அடிப்படைத் தேவைகள் பல பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதால், கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
"குறிப்பாக, கிராஞ்சி, வலைப்பாடு, நாச்சிக்குடா, வேரவில் ஆகிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. மாணவர்களும் ஆசிரியர்களும், பாடசாலைகளுக்குச் செல்வதில் போக்குவரத்து நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளனர்.
"இதேவேளை, கிராமத்தின் வீதிகள் புனரமைக்கப்படாதன் காரணமாக, போக்குவரத்துச் செய்வதில் மக்கள், பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
"வீட்டுத்திட்டம், மின்சார வழங்கல் என்பவற்றிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன.
"இவ்வாறான குறைபாடுகளை அறிந்துகொள்வதற்காக, மாவட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டு, மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாட வேண்டுமென்துடன், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago