2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

95 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி. பகவான், செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்

மிருசுவில், உசன் பகுதியில் வீடொன்றிலிருந்து 95 கிலோகிராம் கஞ்சா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் தப்பியோடிவிட்டார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, சுமார் 23.75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

உசன் பகுதியிலுள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதனை முறியடிக்கத் திட்டம் தீட்டிய பொலிஸார், கஞ்சா வாங்குவர் போல பேரம்பேசியுள்ளனர்.

பேரம் முற்றுப்பெற்றதையடுத்து, பொலிஸார் ஒருவர் சிவில் உடையில் கஞ்சா வாங்குபவர் போல குறித்து வீட்டுக்குச் சென்ற போது, கஞ்சாவை வைத்திருந்த நபர் கஞ்சாவை கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார், கஞ்சாவை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X