2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

1 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் இருந்து ஏ-9 வீதி ஊடாக வவுனியாவுக்கு 1 கிலோகிராம் கஞ்சா கடத்திய ஒருவரை வியாழக்கிழமை (15) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் இருந்து ஏ-9 வீதி ஊடாக வவுனியாவிற்கு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக, மாங்குளம் பொலிஸாரிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, விசேட வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் பனிக்கன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மறித்து  சோதனையிட்டனர்.

இதன்போது, ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றையவர் ஒரு கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X