Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கிச் செல்லவிருந்த பஸ்ஸொன்றில், 7.5 கிலோகிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு பேரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியிருந்து கொழும்புக்குச் செல்லவிருந்த தனியார் பஸ்ஸில் இருந்தவர்களே இவ்வாறு சனிக்கிழமை (28) இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பின்னர், குறித்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவ்விருவரும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும், இவ்விருவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (29), நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
49 minute ago