Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
மாதகல் கடல் மார்க்கமாக 5.5 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுக்களை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவரை, காங்கேசன்துறை கடற்படையினர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (30) இரவு கைதுசெய்துள்ளதாக கடற்படை ஊடகபேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, காங்கேசன்துறைக் கடற்கரையில் இருந்து 8 கிலோமீற்றர் கடல் தூரத்தில் சென்று கொண்டிருந்த படகினை மறித்து கடற்படையினர் சோதனையிட்ட போது, வலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கட்டிகள் மீட்கப்பட்டன.
படகிலிருந்த வல்வெட்டித்துறை மற்றும் மாதகல் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டடனர்.
கைதான சந்தேகநபர்களை, காங்கேசன்துறை கடற்படைத்தளத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும், தொடர்ந்து சந்தேகநபர்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago