2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

9.3 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு

Thipaan   / 2017 மே 12 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

காங்கேசன்துறையிலிருந்து ஒன்பது கடல் மைல்கள் தொலைவில் வைத்து, 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 9.3 கிலோகிராம் ஹெரோய்ன், கடற்படையிரால் மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த  பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர். அதனை சோதனையிட்ட போதே ஹெரோய்ன் போதைப்பொருள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன், வடக்குக் கடற்பரப்பின் ஊடாக கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என  கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X