2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'கிளி. நகரில் 40 வீதமான காணிகள் இராணுவத்தினரிடமுள்ளன'

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, மாவட்டத்தில் 40 சதவீதமான காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மீட்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

மேலும், இராணுவத்தினர் வசமுள்ள அரச காணிகளை மீட்டால், கல்விப் பணிமனைக்கான நிரந்தரக் காணியைப் பெற்றுக்கொள்ளலாம்;. இதற்கு அரசாங்கத்துடன் கதைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கஜன் இராமநாதன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் இணைத் தலைமையில், கரைச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது.

இதில், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு நிரந்தரக் காணியொன்று இல்லாமை தொடர்பான விடயம், கவனத்தில் எடுக்கப்பட்டது.

இதன்போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே சிறிதரன் இவ்வாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X