2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கோவளம் வெளிச்சவீடு புனரமைக்கப்பட வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

காரைநகர் கோவளம் பகுதியில் யுத்தத்தால் சேதமடைந்த வெளிச்சவீட்டை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாறு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், காரைநகரில் சுகாதார வைத்தியதிகாரி ஒருவரை விரைவில் நியமிக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காரைநகர் வைத்தியசாலையில் 1 வைத்தியர் மாத்திரம் கடமையாற்றுவதாகவும் வைத்தியர், தாதியர் உள்ளிட்டவர்களுக்கு ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலை நிர்வாகத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், நோயாளர் காவு வண்டிக்கு ஒரு சாரதி மாத்திரம் கடமையாற்றுவதாகவும் அவர் விடுமுறையில் சென்றால் நோயாளர்களைக் கொண்டு செல்வது சிரமமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வடிகாலமைப்பு சீராக அமைக்கப்படாமையால் வைத்தியசாலை கழிவு நீரை வெளியேற்றுவதில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (29) நடைபெற்ற போதே மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X