2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சந்தர்ப்பத்துக்கு ஏற்ப இனவாதம் பேசுகின்றனர்'

George   / 2016 மே 19 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'முன்னைய அரசாங்கத்தில் 11 ஆயிரம் இளைஞர்களை விடுதலை செய்யும் போது வாயை மூடிக்கொண்டு இருந்த தென்னிலங்கை இனவாதிகள், நல்லாட்சி அரசாங்கம் தற்போது மீதமுள்ள இளைஞர்களை விடுதலை செய்யும் போது இனவாதம் பேசுகின்றார்கள். ஆகவே, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப இனவாதம் பேசும் அரசியலுக்கு மத்தியில் நாடு உள்ளது' என நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜய்முனி சொய்சா தெரிவித்தார்.

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் நீர்வள சபையின் வடக்கு மகாண அலுவலகம், யாழ். பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது. அந்த அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'நான் முன்னைய அரசில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் பிரதி அமைச்சராக இருந்த போது தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்;டாபய ராஜபக்ஷவுடன் கதைத்து, விடுதலைக்கான திட்டங்களை வகுத்தபோது என்னை அமைச்சு பதவியில் இருந்து தூக்கிவிட்டனர். இருந்தும் அத்திட்டம் தொடர்ந்து நடைபெற்று, 11 ஆயிரம் இளைஞர்கள் விடுதலை செய்யபட்டனர். அப்போது தென்னிலங்கை இனவாதிகள், இனவாதம் பேசவில்லை.

ஆனால், தற்போது நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீதமுள்ள இளைஞர்களில், குறைந்தளவில் குற்றம் செய்தவர்களை விடுதலை செய்த போது அரசு பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றது என்று இனவாதம் பேசுகின்றார்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டு நான் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டேன். அப்போது இங்குள்ள குளங்களின் நிலைமைகளை பார்வையிட்டேன். இவற்றை சீர்செய்தால் நீர்வளம் சிறப்பாக இருக்கும் என எண்ணினேன். அதிஷ்டவசமாக தற்போது இவ்வமைச்சு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கு தேவையான நிதிவளம் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் பெற்று தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு தேவை' என அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X